தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பேசிய திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன், முதல்வர் விஜய்யை ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசியதுடன், ஆபாச வார்த்தைகளாலும் பேசியதாக திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக எம்எல்ஏ துரை சந்திரசேகரன், சென்னை வேப்பேரியில் உள்ள துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று ஆஜரானார். அவரிடம் சைபர் க்ரைம் போலீஸார் அரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.














