ரகுபதியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு ரத்து

0
27

முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவுமான ரகுபதிக்கு எதிராக தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்எல்ஏ ரகுபதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்று தவெக வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் பொன்.பன்னீர்செல்வம் என்பவர் தரப்பிலும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொன்.பன்னீர்செல்வம், நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கை தாக்கல் செய்யாமல், வழக்குரைஞர் மூலமாக தாக்கல் செய்திருந்ததால், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here