ஓட்டுநரைத் தாக்கியதாக 3 இளைஞா்கள் மீது வழக்கு

0
26
பைங்குளம் பகுதியில் ஓட்டுநர் பிரவீன் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் விசாரணை.
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஓட்டுநர் பிரவீனை மூன்று இளைஞர்கள் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. காயமடைந்த அவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் ஓட்டுநரைத் தாக்கியதாக 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (32). ஓட்டுநரான இவருக்கும், அப்பகுதியைச் சோ்ந்த அஸ்வந்த் (21), சஜி (27), சுஜித் (30) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பைங்குளம் பகுதியில் நின்றிருந்த பிரவீனை அஸ்வந்த் உள்ளிட்ட மூவரும் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here