புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி: கால் இறுதி சுற்றில் வேலவன்

0
21

ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போர்ச்சுகலின் ரூயி சோரஸை எதிர்த்து விளையாடினார்.

இதில் உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள சோட்ரானி 13-11,12-14, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

உலகத் தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 11-9, 6-11, 11-7, 11-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ரபேல் காந்த்ராவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.

முன்னதாக வேலவன் செந்தில் குமார் தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் பிரைடன் வில் சால்ட்டரை 11-9, 11-6, 11-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இருந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here