பாகிஸ்தான் தொடர் நெருங்கும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கேற்க வாரியம் அனுமதி

0
27

ஆஸ்திரேலிய ​கிரிக்​கெட் அணி இம்​மாத இறு​தி​யில் பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. இதில் பங்​கேற்​ப​தற்​காக ஆஸ்திரேலிய அணி வரும் 23-ம் தேதி இஸ்​லா​மா​பாத் சென்றடையும் வகை​யில் பயணம் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்த தொடரில் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வீரர்​கள் பங்​கேற்​பார்​களா என்​ப​தில் சந்​தேகம் எழுந்​தது. ஏனெனில் தற்​போது ஆஸ்​திரேலிய அணி​யின் நட்​சத்​திரங்​கள் இந்​தி​யா​வில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளை​யாடி வரு​கின்​றனர். இந்த தொடரின் லீக் ஆட்​டங்​கள் வரும் 24-ம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று ஆட்​டங்​கள் 26-ம் தேதி தொடங்குகிறது. இதன் பின்​னர் 31-ம் தேதி இறு​திப் போட்டி நடைபெறுகிறது.

இந்​நிலை​யில் ஐபிஎல் தொடரில் விளை​யாடி வரும் ஆஸ்​திரேலிய வீரர்​களுக்கு பாகிஸ்​தான் சுற்​றுப்​பயணத்​தில் இருந்து விலக்கு அளித்​துள்​ளது ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம். இந்த தகவலை ஐபிஎல் தொடரின் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யின் வட்டாரங்​கள் உறு​திப்​படுத்தி உள்​ளன. ஹைத​ரா​பாத் அணி​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் பாட் கம்​மின்​ஸ், தொடக்க வீரர் டிரா​விஸ் ஹெட் ஆகியோர் விளை​யாடி வரு​கின்​றனர்.

அந்த அணி தற்​போது 14 புள்​ளி​களை குவித்து பிளே ஆஃப் சுற்றை நெருங்​கும் நிலை​யில் உள்​ளது.இவர்​களு​டன் மற்ற ஆஸ்​திரேலிய வீரர்​களான ஜோஷ் ஹேசில்​வுட், டிம் டேவிட் ஆர்​சிபி அணிக்காவும், மிட்​செல் மார்​ஷ், ஜோஷ் இங்​லிஸ் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்​காக​வும், சேவியர் பார்ட்​லெட், மார்​கஸ் ஸ்டோனிஸ், கூப்​பர் கானோலி பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​காக​வும், மேத்யூ ஷார்ட் சிஎஸ்கே அணிக்​காக​வும், மிட்​செல் ஸ்டார்க் டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்​காக​வும், கேமரூன் கிரீன் கொல்கத்தா நைட்​ரைடர்ஸ் அணிக்​காக​வும், ஜோஷ் ஹேசில்​வுட், டிம் டேவிட் ஆகியோர் ஆர்​சிபி அணிக்​காக​வும் விளை​யாடி வருகின்​றனர்.

இவர்​களில், டெல்லி கேப்​பிட்​டல்ஸ் மற்​றும் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் நாக் அவுட் சுற்​றுக்​குத் தகுதி பெறத் தவறினால் கேமரூன் கிரீன், மிட்​செல் ஸ்டார்க் ஆகியோர் லீக் சுற்றுக்​குப் பிறகு ஐபிஎல்​-லிருந்து வெளி​யேறக்​கூடும். டெல்லி அணி 10 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. கொல்​கத்தா அணி 7 புள்​ளி​களு​டன் 8-வது இடத்​தில் உள்​ளது.

மறு​புறம் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி புள்​ளி​கள் பட்டியலில் 10-வது இடத்​தில் பின்​தங்​கி​யுள்​ள​தால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறு​வது கடினமே. இதனால் மிட்​செல் மார்​ஷ், ஜோஷ் இங்​லிஷ் ஆகியோர் பாகிஸ்​தானுக்கு எதி​ரான தொடரில் விளை​யாடக்​கூடும். அதேவேளை​யில் ஆர்​சிபி மற்​றும் பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற பிர​காச​மான வாய்ப்பு இருப்​ப​தால் ஜோஷ் ஹேசில்​வுட், டிம் டேவிட் ஆகியோர் பாகிஸ்​தானுக்கு எதி​ரான தொடரில் விளை​யாடு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறைவே.

இருப்​பினும் இது​வரை பாகிஸ்​தான் தொடருக்​கான அணியை ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் அறிவிக்​க​வில்​லை. பாகிஸ்தானுக்கு எதி​ரான தொடரை அடுத்து ஆஸ்​திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் முதல் வாரத்​தில் வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 3 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடரில் பாட் கம்​மின்​ஸ் உள்​ளிட்ட முன்​னணி வீரர்​கள் அனை​வரும்​ விளை​யாடக்​கூடும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here