நாகர்கோவிலில் மதுக்கடைக்கு எதிராக பாஜக கையெழுத்து இயக்கம்

0
193

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி ஊழல் நடந்தி ருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த ஊழலை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா. ஜனதா கட்சியினரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் குமரி மாவட்ட பா. ஜனதா சார்பில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராககையெழுத்து இயக்கம் நாகர்கோவில் டி. வி. டி. காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடந்தது. இதற்கு மாநில செயலாளர் மீனாதேவ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், கவுன்சிலர் ரமேஷ், கவுன்சிலர் ரோசிட்டா, முன்னாள் மண்டல தலைவர் திருமால் உள் பட பலர் பங்கேற்று கடைகள், வணிகநிறுவனங்கள் மற்றும் வீடு வீடாகசென்று பொதுமக்களை சந்தித்து கையெழுத்து வாங்கினர். அந்த வகையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக கையெழுத்து போட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here