குமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே தடைப்பாடு இன்றி கனிவள பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி சித்திரங்கோடு சந்திப்பு பகுதியில் எம்.ஆர். காந்தி எம்எல்ஏ தலைமையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி போலீசார் எம்.ஆர்.காந்தி உட்பட 300-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.













