Home உலக செய்திகள் இந்தியா மீது 100 சதவீதம் சுங்க வரி விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா

இந்தியா மீது 100 சதவீதம் சுங்க வரி விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா

0

ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026’ என்று அழைக்கப்படும் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு 214 – 211 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

ரஷ்ய தலைவர்கள், அந்நாட்டின் எரிசக்தித் துறை மீது மட்டும் தடைகளை விதிக்காமல், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடும் கப்பல்கள் மீதும் தடைகளை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகமே உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி ஆதாரமாக உள்ளது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட அதன் முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் மீது 100 சதவீத சுங்க வரி விதிக்க அதிபருக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் நாடுகளின் பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும், அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version