Home உலக செய்திகள் சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து 60 பேர் உயிரிழப்பு

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து 60 பேர் உயிரிழப்பு

0

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர் டோபன் மாகாணத்தில் எல்-நஹொட் நகருக்கு அருகே அல்-சாரா என்கிற தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் இதன் இடிபாடுகளில் சிக்கினர். சக தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். எனினும் இந்த விபத்தில் 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை பத்திரமாக மீட்க முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version