அயோத்தி ராமர் கோயில் தரிசன நேரம் இரவு 11 மணி வரை நீட்டிப்பு: பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நடவடிக்கை

0
22

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தரிசன நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் தற்போது ‘சவுராசி கோசி பரிக்கிரமா’ நடை எனும் ஆன்மிக நிகழ்வு நடைபெற்று வருகிறது. மேலும், வரவிருக்கும் ஏகாதசி அன்று ‘பஞ்சகோசி பரிக்கிரமா’ நடையும் நடைபெறவுள்ளது. இத்தகைய ஆன்மீக நிகழ்வுகளால் ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, ராமர் கோயிலில் குழந்தை ராமரை தரிசிக்கும் நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், கார்த்திகை மாதம் என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. எனவே, பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரிசன நேரத்தை நீட்டிப்பதன் மூலம், கூடுதல் பக்தர்கள் தரிசன வாய்ப்பைப் பெற முடியும்.

இது குறித்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் ராஜ்குமார் தாஸ் கூறுகையில், “தற்போது புனிதமான கார்த்திகை மாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் அக்ஷய நவமி, ஏகாதசி, பஞ்சகோசி மற்றும் சௌராசி கோசி பரிக்கிரமா போன்ற ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காகவே தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தரிசன நேரம் குறைவாக இருந்ததால், பக்தர்கள் பலர் குழந்தை ராமரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்ந்தது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் எளிதாக ராமரை தரிசிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.” என்று தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here