Home உலக செய்திகள் பஹ்ரைனில் அமெரிக்க ரேடார் கண்காணிப்பகம் மீது தாக்குதல் – ஈரான் பாதுகாப்புப் படை தகவல்

பஹ்ரைனில் அமெரிக்க ரேடார் கண்காணிப்பகம் மீது தாக்குதல் – ஈரான் பாதுகாப்புப் படை தகவல்

0

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் கண்காணிப்பு அமைப்பு மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக, ஈரானின் இஸ்லாமிய புரட்​சிகர பாது​காப்​புப் படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்​கிய போர், இது​வரை முடிவுக்கு வர​வில்லை. இந்​நிலை​யில், ஈரானின் வான்​பரப்​பில் அமெரிக்க ட்​ரோன்​கள் தொடர்ந்து அத்​து​மீறி நுழைந்​ததற்​குப் பதிலடி​யாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் கண்​காணிப்பு அமைப்பு மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஈரானின் இஸ்லாமிய புரட்​சிகர பாது​காப்​புப் படை தெரிவித்துள்ளது.

இது​குறித்து, ஈரான் பாது​காப்​புப் படை​யின் அதி​காரப்​பூர்வ ஊடகமான செபா நியூஸ் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், “புரட்​சிகர பாது​காப்​புப் படைக்​குச் சொந்​த​மான போர் ட்​ரோன்​கள் இன்று (நேற்று) காலை பஹ்ரைனில் உள்ள ஷேக் இசா விமானப்​படைத் தளத்​தில் அமெரிக்​கப் படை​யின​ரால் இயக்​கப்படும் ரேடார் கண்​காணிப்பு அமைப்​பைக் குறிவைத்து தாக்​குதலை நடத்​தின” என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, பஹ்ரைனில் நேற்று அச்​சுறுத்​தல் எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து, அங்கு வெடிச்​சத்​தங்​கள் கேட்டதாகத் தகவல்​கள் வெளியாகின. இந்த வெடிச்​சத்​தங்​கள் கேட்​கப்​படுவதற்கு சில மணி நேரங்​களுக்கு முன்பு, ஈரான் ஒரு புதிய விதியை அறி​வித்​தது.

ஈரானில் உள்ள பொது​மக்​கள் பயன்​பாட்டு உள்​கட்​டமைப்​பு​களை அமெரிக்​காவோ அல்​லது இஸ்ரேலோ தாக்​கினால், பதிலடியாக அந்த நாடுகளின் ராணுவத் தளங்​களுக்கு அரு​கில் அமைந்​துள்ள பொது​மக்​கள் பயன்​பாட்டு உள்கட்​டமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என்று எச்​சரித்​தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version