ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்

0
19

ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல் நடத்தி​யது. இதில் ஓர் இந்​திய மாலுமி உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் படு​கா​யம் அடைந்​தனர். இதுதொடர்​பாக ஈரான் தூதரக அதி​காரி​களை நேரில் வரவழைத்து மத்​திய அரசு கண்டனம் தெரி​வித்​துள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, ஈரான் இடையே போர் மூண்​டது. பல்​வேறு நாடு​களின் சமரசத்​தால் கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இரு நாடு​கள் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு தரப்​பும் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டன. இதன்​பிறகு தங்​கள் எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி வழி​யாகவே எண்​ணெய் கப்பல்கள் கடந்து செல்ல வேண்​டும் என்று ஈரான் ராணுவம் கட்டுப்​பாடு விதித்​தது. இதை மீறி ஓமன் கடல் பகுதி வழி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த எண்​ணெய் கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது.

இதன்​ காரண​மாக அமைதி ஒப்​பந்​தம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி பகிரங்​க​மாக அறி​வித்​தார். தற்​போது அமெரிக்​கா, ஈரான் இடையே தீவிர போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த சூழலில் ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு சொந்​த​மான எம்டி அல் பஹி​யா, எம்டி மொம்​பாசா ஆகிய இரு எண்​ணெய் கப்​பல்​கள் நேற்று ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முயன்​றன. இரு கப்​பல்​களி​லும் மாலுமிகள் உட்பட மொத்​தம் 46 ஊழியர்​கள் இருந்​தனர். அவர்​களில் 30 பேர் இந்​தி​யர்​கள் ஆவர்.

இந்த எண்​ணெய் கப்​பல்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் இரு கப்​பல்​களும் கடுமை​யாக சேதமடைந்​தன. இந்த தாக்​குதலில் ஓர் இந்​திய மாலுமி உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் படு​கா​யம் அடைந்​தனர். இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத் துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எம்டி அல் பஹியா எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட ஏவு​கணை தாக்​குதலில் ஓர் இந்​திய மாலுமி உயி​ரிழந்​தார். மற்​றொரு இந்​திய மாலுமி படு​கா​யம் அடைந்​தார். எம்டி மொம்​பாசா எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் 9 இந்​திய மாலுமிகள் படு​கா​யம் அடைந்​தனர். அவர்​களில் 2 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது.

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் சரக்கு கப்​பல்​கள் மற்​றும் எண்​ணெய் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​வதை இந்​தியா மிக வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது. சர்​வ​தேச சட்ட விதி​களின்​படி மேற்கு ஆசி​யா​வில் பதற்​றத்தை தணித்து அமை​தியை ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டு உள்​ளது. மத்​திய அரசு சார்​பில் இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டது.

இதன்​படி ஈரான் தூதரக துணைத் தலை​வர் முகமது ஜாவத் ஹூசைனி மற்​றும் தூதரக மூத்த அதி​காரி ஒரு​வர் டெல்​லி​யில் உள்ள மத்​திய வெளி​யுறவுத் துறை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜராகினர். அப்​போது இந்​திய மாலுமி உயி​ரிழந்​தது தொடர்​பாக ஈரான் தூதரக அதி​காரி​களிடம் மத்​திய அரசு கடும் கண்​டனத்​தைப் பதிவு செய்​தது.

11 கப்​பல்​கள் கடலில் நிறுத்​தம்

மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்ஸ்​வால் டெல்​லி​யில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: ஈரானில் இருந்து 2,361 இந்​தி​யர்​கள் பத்​திர​மாக தாயகம் திரும்பி உள்​ளனர். தற்​போதைய போரால் இந்​தி​யா​வுக்கு வர வேண்​டிய 11 எண்​ணெய் கப்​பல்​கள் பெர்​சிய வளை​குடா பகு​தி​யில் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்டு உள்​ளன.

இந்த கப்​பல்​களில் 148 இந்​திய மாலுமிகள், ஊழியர்​கள் உள்​ளனர். மேற்கு ஆசிய பதற்​றத்தை தணிக்க வேண்​டும். ஹார்​முஸ் ஜலசந்தி​யில் பாது​காப்​பான கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்ய வேண்​டும். இந்​திய மாலுமி உயி​ரிழந்​தது தொடர்​பாக ஈரான் தூதரக துணைத் தலை​வரிடம் கடும்​ கண்​டனம்​ தெரிவிக்கப்பட்டது. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு 20% கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் வளைகுடா நாடுகளை சேர்ந்த தலைவர்களின் அறிவுரையின் பேரில் 20 சதவீத கட்டண திட்டம் கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடைய ஈரான் ராணுவம் கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டு விட்டது. அமெரிக்காவின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்த ஜலசந்தி திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருவதால் உலகம் முழுவதும் மீண்டும் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா தீவிர தாக்குதல்

ஈரானின் புஷேர், பந்தர் அப்பாஸ், மஹ்சஹர், அபாதான் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் அமெரிக்க போர் விமானங்களும் குண்டு மழை பொழிந்தன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் ராணுவம் ஆளில்லாத ட்ரோன் படகுகள் மூலம் போர்க்கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம்.

இதே பாணியில் ஈரானின் பந்தர் அப்பாஸ் கடற்படைத் தளத்தின் மீது அமெரிக்க கடற்படை நேற்று ட்ரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத், பஹ்ரைன், ஜோர்டான் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here