ரூ.472 கோடி போதைப்​பொருளை அழித்த அசாம் முதல்வர்

0
22

அசாம் மாநிலத்​தில் கடந்த சில ஆண்​டு​களாக போதைப் பொருள் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த காவல்​ துறை தீவிர சோதனை​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதில் பல கோடி ரூபாய் மதிப்​பிலான போதைப்​ பொருட்​கள் பறி​முதல் செய்யப்பட்டன.

இந்த வழக்​கு​களின் சட்​ட ரீ​தி​யான நடை​முறை​கள் முடிவடைந்​து, நீதி​மன்​றத்​தின் முறை​யான அனு​மதி பெற்​றதைத் தொடர்ந்​து, அவற்றை அதி​காரப்​பூர்​வ​மாக அழிப்​ப​தற்​கான மாநில அளவிலான சிறப்பு நிகழ்ச்​சிக்கு நேற்று ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

குவாஹாட்டி புறநகர்ப் பகு​தி​யில் நடை​பெற்ற இந்த பிரம்​மாண்ட போதைப் ​பொருள் ஒழிப்பு நிகழ்ச்​சி​யில், முதல்​வர் ஹிமந்த விஸ்வசர்​மா, அமைச்​சர்​கள் ஜெயந்த மல்லா பரு​வா, நாராயண் தேகா மற்​றும் உயர் போலீஸ் அதி​காரி​கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்​சி​யின் போது, பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப்​ பொருள் மூட்​டைகளின் மீது முதல்​வர் ஹிமந்த விஸ்வ சர்​மாவே நேரடி​யாக ‘ரோடு ரோலர்’ எந்​திரத்தை ஓட்டி அவற்​றைச் சிதைத்து அழித்தார்.

இது தொடர்​பான வீடியோவை அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தி​லும் பகிர்ந்​துள்​ளார். மத்​திய அரசு வழங்​கிய அதி வெப்ப எரி உலை மூலம், சுற்​றுச்​சூழல் பாதிப்பு இல்​லாத அறி​வியல் பூர்வமான முறை​யில் ரூ.472.51 மதிப்​புள்ள போதைப் பொருட்​கள் அழிப்​புப் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here