ஆசிய விளையாட்டு போட்டி: வுஷுவில் வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி

0
25

20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 6-வது நாளான நேற்று வுஷு​வில் மகளிருக்​கான 60 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்டி​யில் இந்​தி​யா​வின் நவுரேம் ரோஷிபினா தேவி, சீனா​வின் சியாவு ஜாங்​குடன் மோதி​னார்.

இதில் ரோஷிபினா தேவி 0-2 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றார். 2 சுற்​றுகளி​லும் சியாவு ஜாங்​குக்கு நடு​வர்​கள் முழு​மை​யாக 5-0 என முடிவு​களை வழங்​கினர். முதல் சுற்​றில் சியாவு 6-2, 6-3, 6-2, 6-2, 8-2 எனவும், 2-வது சுற்​றில் 10-2, 8-3, 7-3, 7-3, 6-1 எனவும் புள்​ளி​களை குவித்​தார்.

ஆசிய விளை​யாட்​டில் ரோஷிபினா தேவி பதக்​கம் வெல்​வது இது 3-வது முறை​யாகும். கடந்த முறை வெள்​ளிப் பதக்​கத்​தை​யும், 2018 ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் வெண்​கலப் பதக்​கத்​தை​யும் வென்ற ரோஷிபினா தேவி​யால், இம்​முறை தனது எதி​ராளி​யின் ஆக்​ரோஷ​மான ஆட்​டத்​தை​யும் தொழில்​நுட்​பத் திறனை​யும், ‘பக்​க​வாட்டு கிக்’ தாக்​குதல்​ களை​யும் சமாளிக்க முடி​யாமல் போனது.

ரோஷிபினா தேவி கூறும்​போது, “நான் ஏற்​கெ​னவே வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருக்​கிறேன், இந்த முறை​யும் என்​னால் வெள்​ளிப் பதக்​கம் மட்​டுமே வெல்ல முடிந்​தது. இந்​திய மக்​களுக்கு என்​னால் தங்​கப் பதக்​கத்தை வழங்க முடிய​வில்​லை. எல்​லோரும் விரும்​பியதை என்​னால் கொடுக்க முடிய​வில்​லை. நான் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிக்கு இங்கு வந்​த​தில் நிறைய குழப்​பங்​கள் இருந்​தன. பயிற்சி பெறு​வதற்கு எனக்கு அதிக நேரம் கிடைக்​க​வில்​லை. செப்​டம்​பர் 10-ம் தேதி​தான் அணி​யில் நான் சேர்க்​கப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​தது.

இதனால் அதி​கம் பயிற்சி செய்​யாமல் நேரடி​யாக மணிப்​பூரில் இருந்து இங்கு வந்​தேன். ஆனால், பயிற்​சி​யாளர் அமித் பால் இறு​திப் போட்டி வரை நான் முன்​னேறு​வதற்கு மிக​வும் உதவி​னார். வரவிருக்​கும் போட்​டிகளில் என்​னால் முடிந்​தவரை சிறப்​பாக செயல்பட முயற்சி செய்​வேன், தவறுகளி​லிருந்து பாடம் கற்​றுக்​கொண்டு திரும்​புவேன்” என்​றார்.

ரோஷிபினா தேவி கடைசி நேரத்​தில்​தான் இந்​திய அணி​யில் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். முதலில் திவ்​யான்ஷி சவுத்​ரியே தேர்வு செய்​யப்​பட்டு இருந்​தார். கடந்த ஜூன் மாதம் ஸ்ரீநகரில் நடை​பெற்ற வீராங்​க​னை​கள் தேர்​வில் திவ்​யான்​ஷி​யிடம், ரோஷிபினா தேவி தோல்வி அடைந்​திருந்​தார். ஆசிய விளை​யாட்டு போட்டி தொடங்​கு​வதற்கு சில வாரங்​களுக்கு முன்​னர் திவ்​யான்ஷி திடீரென கா​யம்​ அடைந்​தார்​. இதன்​ காரண​மாக அவருக்​கு பதிலாக ரோஷிபி​னா தேவி தேர்​வா​னார்​.

வுஷு என்றால் என்ன?

வுஷு விளையாட்டு என்பது இரண்டு வீரர்களுக்கு இடையே நடைபெறும் நேரடி மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை கலந்த மோதலாகும். இதில் குத்துவது, உதைப்பது மற்றும் எதிரியைத் தூக்கி எறிவது போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இந்த விளையாட்டு சீனாவின் தற்காப்பு கலைகளில் இருந்து தோன்றியதாகும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here