அருமனை பகுதியை சேர்ந்த 52 வயது கூலித் தொழிலாளி ராபி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டில் ஹாலில் படுத்திருந்த ராபி, மனைவி மற்றொரு அறையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். மனைவி ஹாலில் சென்று பார்த்தபோது ராபி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அருமனை போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














