அருமனை அருகே இரும்புலி பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் – விலாசினி தம்பதியின் மகள் பென்ஷா (28). இவர் ராஜ்வினிஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். 7, 5 வயதில் மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பென்ஷா அவரது 2 குழந்தைகளுடன் திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து தாய் விலாசினி அருமனை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பென்ஷாவை பலமுறை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிய வந்தது.