அருமனை: பைனான்சியர் மர்மமான முறையில் மரணம்

0
192

இடைக்கோடு பகுதி புத்தன்சந்தை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரதீப் தாமோதரன் (49). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமான ஒரு வருடத்திலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். 

நேற்று முன்தினம் (மார்ச் 2) காலை வீட்டில் குளிக்கச் செல்வதற்கு முன்பு பிரதீப் தாமோதரன் தலைக்கு ஹேர் டை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கு இடையே நேற்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரதீப் உடலில் உணவுக் குழாய் செல்லும் பாதையில் ஹேர் டை இருந்தது தெரியவந்துள்ளது. எனவே அவர் ஹேர் டை குறித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here