குமரி மாவட்ட காவல்துறையின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் சார்பில் தற்போது அருமனை காவல் துறை எல்லைக்குட்பட்ட 20 பகுதிகளில் 42 சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. உத்திரங்கோடு சந்திப்பில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு மார்த்தாண்டம்
உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் நல்ல சிவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பங்கேற்று சிசிடிவி கேமரா செயல்பாட்டை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், – கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அந்த கால பழமொழி. ஆனால் சிசிடிவி கேமரா இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தான் காவல்துறையின் இந்த கால பழமொழி. சிசிடிவி கேமரா பொருத்தினால் தான் குற்றம் நடந்தால் கண்டுபிடிக்க முடியும். குற்றம் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் முக்கிய ஆதரவாகவும் பயன்படும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.