குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் அங்குஷ் பங்ஹால், பர்வீன் ஹூடா

0
23

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை​யில் ஆடவருக்​கான 80 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அங்​குஷ் பங்​ஹால் 4-1 என்ற கணக்​கில் உஸ்​பெகிஸ்​தானின் ஃபஸ்​லித்​தின் எர்​கின்​போயேவை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

இதன் மூலம் ஆசிய விளை​யாட்டு குத்​துச்​சண்​டை​யில் ஆடவர் பிரி​வில் 8 வருடங்​களுக்கு பிறகு இறு​திப்​போட்​டிக்கு முன்​னேறிய இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்​றார் அங்​குஷ் பங்​ஹால். கடைசி​யாக 2018-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் 49 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் அமித் பங்​ஹால் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தார்.

மகளிருக்​கான 65 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்​றில் இந்தியா​வின் பர்​வீன் ஹூடா 5-0 என்ற கணக்​கில் சீனா​வின் லி ஷு-வை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் ஆசிய விளை​யாட்டு குத்​துச்​சண்டை வரலாற்​றில் மகளிர் பிரி​வில் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறிய 3-வது இந்​திய வீராங்கனை என்ற பெரு​மையை பர்​வீன் ஹூடா பெற்​றார். இதற்கு முன்​னர் கடந்த 2014-ல் மேரி கோம் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி தங்​கம் வென்​றிருந்​தார். 2023-ல் லவ்​லினா போர்​கோஹைன் வெள்​ளி கைப்​பற்​றி​யிருந்​தார்.

அதேவேளை​யில் ஆடவருக்​கான +90 கிலோ எடைப் பிரி​வில் இந்தியா​வின் நரேந்தர் பெர்வால் 0-5 என்ற கணக்​கில் கஜகஸ்​தானின் ஐபெக் ஓரல்​பே​விடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றார். ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் நரேந்​தர் பதக்​கம் கைப்​பற்​று​வது இது 2-வது முறை​யாகும். கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளை​யாட்​டிலும் நரேந்​தர் வெண்​கலப்​ பதக்​கம்​ வென்​றிருந்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here