ஆனந்தமங்கலம்:  அரசின் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம்

0
137

தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம் பைங்குளம் ஊராட்சி, ஆனந்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய்குமார் மீனா மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டு எளிய மக்களுக்கான அரசு உதவிகளை வழங்கினர். 

இந்த முகாமில் இலவச வீட்டு மனைப் பட்டா, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், முதியோர் உதவிகள், ஆதரவற்றோருக்கான ஓய்வூதியங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை சப் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு உதவிகளைப் பெற நடவடிக்கை மேற்கொண்டனர். 

முகாம் ஏற்பாடுகளை கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் பைங்குளம் வருவாய் ஆய்வாளர் விக்னேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெகன் மற்றும் வருவாய் ஊழியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here