200 பேர் அறிமுகமாகும் ‘அமெரிக்க ஆவி’

0
34

நெப்போலியன் நடித்துள்ள திரைப்படம், ‘அமெரிக்க ஆவி’. முழுவதும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் படமான இதைத் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கி உள்ளார். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆதிஷ் உத்ரியன் இசை அமைத்துள்ளார். ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி, தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து இசையை வெளியிட்டனர். தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா, தயாரிப்பாளர் டி.சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், நடிகர் நெப்போலியன் பேசும்போது, “இந்தப் படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என சுமார் 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினீயர்கள், டாக்டர்கள், சயின்டிஸ்ட், பேராசிரியர்கள் என எல்லோரும் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஒதுக்கித் தந்த நேரத்தைப் பயன்படுத்தி, 75 நாட்களில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

சிவாஜி நடித்த ‘பாரத விலாஸ்’ படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். இந்த அளவுக்கு இந்த படம் வித்தியாசமான படம்” என்றார்.

இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் பேசும்போது, “இதற்கு முன் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தேன். பிறகு குடும்பச் சூழல் காரணமாக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன். ஒருமுறை நெப்போலியனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அமெரிக்காவிலேயே ஏதாவது படத்தை உருவாக்க முடியுமா? அதற்கான கதை இருக்கிறதா? என கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து கதையைச் சொன்னேன். அது அவருக்குப் பிடித்திருந்தது. அப்படி உருவான படம் தான் இது” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here