வெளிநாட்டு மண்ணில் 2,500 ரன்கள் குவிப்பு: தோனி சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த்

0
25

இலங்​கைக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் 63 ரன்​கள் குவித்த இந்​திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், வெளி​நாட்டு மண்​ணில் அதிக ரன்​கள் எடுத்த விக்​கெட் கீப்​பர்​கள் பட்​டியலில் எம்​.எஸ்.தோனி மற்​றும் மார்க் பவுச்​சரின் சாதனை​களை முறியடித்து 3-வது இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளார்.

கொழும்பு சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இப்​போட்​டி​யில், முதல் நாள் ஆட்​டத்​தின்​போது காயம் காரண​மாகக் களத்​தில் இருந்து வெளி​யேறிய ரிஷப் பந்த் நேற்று 2-வது நாள் ஆட்​டத்​தில் மீண்​டும் களமிறங்​கி​னார். பொறுப்​புட​னும் அதிரடி​யாக​வும் விளை​யாடிய அவர், தனது 21-வது அரை சதத்தை விளாசிய நிலை​யில் 89 பந்​துகளில் 63 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார்.

இந்த இன்​னிங்​ஸின் மூலம், வெளி​நாட்டு மற்​றும் நடுநிலை​யான மைதானங்​களில் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டிகளில் 2,500 ரன்​களைக் கடந்த முதல் இந்​திய விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேன் என்ற வரலாற்​றுச் சாதனையை ரிஷப் பந்த் படைத்​தார். உலக அளவில் இச்​சாதனையை எட்​டும் 3-வது விக்​கெட் கீப்​பர் இவரா​வார்.

இதற்கு முன்​னர் இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் எம்​.எஸ். தோனி வெளி​நாட்டு மண்​ணில் 48 டெஸ்ட் போட்​டிகளில் 2,496 ரன்​களும் (1 சதம், 18 அரைசதம்), தென் ஆப்​பிரிக்​கா​வின் மார்க் பவுச்​சர் 72 போட்​டிகளில் 2,514 ரன்​களும் (1 சதம், 15 அரைசதம்) எடுத்​திருந்​தனர்.

தற்​போது ரிஷப் பந்த் 36 போட்​டிகளில் 6 சதங்​கள், 11 அரை சதங்​களு​டன் 2,534 ரன்​கள் குவித்து இரு​வரை​யும் பின்​னுக்​குத் தள்​ளி​யுள்​ளார். இந்த வகை சாதனை​யில் பாகிஸ்​தானின் முன்​னாள் வீரர் சர்ஃப​ராஸ் அகமது 52 போட்​டிகளில் 2,696 ரன்​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார்.

ஆஸ்​திரேலி​யா​வின் முன்​னாள் வீரர் ஆடம் கில்​கிறிஸ்ட் 41 போட்​டிகளில் 2,634 ரன்​கள் குவித்​து 2-வது இடத்​தில்​ உள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here