2 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு தொடக்கம்

0
31

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்இயந்திரங்கள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும் பணிகள் 2-ம் நிலை கணினி குலுக்கல் முறையில் நடைபெறுகிறது.

தாராபுரம் தொகுதியில் இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் நேற்று (செப். 24) நடைபெற் றது. இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்றும் நாளையும் (செப்.25, 26) நடத்தப்பட உள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் இன்று (செப்.25) நடைபெறும். வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி 27, 28-ம் தேதிகளில் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here