ஒரு கணக்கெடுப்பாளருக்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடா? – ‘சென்சஸ்’ அலுவலர்களின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்

0
56

தமிழகத்​தில் நடை​பெற்று வரும் வீடு​கள் கணக்​கெடுப்​பில், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் அதி​கம் உள்ள பகு​தி​களில் 3 ஆயிரம் வீடு​கள் வரை வரு​வ​தால் கணக்​கெடுப்​பாளர்​கள் சிக்​கலில் தவித்து வரு​கின்​றனர்.

நாடு முழு​வதும் நடை​பெறும் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பின் ஒரு பகு​தி​யாக, வீடு​கள், அதில் உள்ள வசதி​கள் கணக்​கெடுப்பு தமிழகத்​தில் கடந்த ஆக.1 முதல் தொடங்​கி​யுள்​ளது.

அடுத்​தகட்​ட​மாக, 2027 பிப்​ர​வரி​யில் மக்​கள்​தொகை எண்​ணிக்கை தொடர்​பான கணக்​கெடுப்பு நடை​பெற உள்​ளது. தற்​போது வீடு​கள் கணக்​கெடுப்​பில், வீடு, அந்த வீட்​டின் தரை, சுவர், மேற்​கூரை எந்த பொருளால் ஆனது, வீட்​டில் உள்ள அறை​கள், கழிப்​பறை, குடிநீர் ஆதா​ரம், கழி​வுநீர் வெளி​யேற்​றம், வாகன வசதி, தொலைபேசி, தொலைக்​காட்சி இணைப்​பு, இணை​யதள வசதி உள்​ளிட்ட 33 விவரங்​கள் பெறப்​படு​கின்​றன.

இப்​பணி​யில் 1.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வரு​வாய்த் துறை​யினர், ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். கணக்​கெடுப்​பாளர், ஒரு​வருக்கு 200 முதல் 300 சென்சஸ் வீடு​கள் என்ற அளவில் பிரிக்​கப்​படு​கி்றது.

ஆனால், தற்​போது கூகுள் மேப் மூலம் குறிப்​பிட்ட பகுதி மேப்​பிங் செய்​யப்​பட்டு அதில் உள்ள வீடு​களை கணக்​கெடுக்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் அதி​கம் உள்ள பகு​தி​களில் ஒருகணக்​கெடுப்​பாள​ருக்கு 1000 முதல் 3000 வீடு​கள் வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

குறிப்​பாக, தாம்​பரத்​துக்கு உட்​பட்ட பெரும்​பாக்​கம் நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பில் ஒரு பிளாக்​கில் 96 வீடு​கள் உள்​ளன. அப்​படி​யா​னால், 3 பிளாக் என்ற அளவி்ல்​தான் ஒரு கணக்​கெடுப்​பாள​ருக்​ குரிய களம் ஒதுக்​கப்பட வேண்​டும்.

ஆனால், கூகுள் மேப் அடிப்​படை​யில் ஒதுக்​கப்​பட்​ட​தால் 25-க்​கும் மேற்​பட்ட பிளாக்​கு​கள் குறிக்​கப்​பட்​டுள்​ளன. இதனால், ஒரு கணக்​கெடுப்​பாள​ருக்கு 3,000 வீடு​கள் வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

வரு​வாய்த் துறை அதி​காரி​களுக்கு இந்த விவரம் தெரிந்​திருந்​தும், கூடு​தல் நபர்​களை நியமிக்​காமல், இருப்​பவர்​களைக் கொண்டே பணி​களை ஒதுக்கி வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

இதனால், பணி ஒதுக்​கீடு பெற்​றவர்​களும் இது​வரை அதற்​கான உத்​தர​வு​களை பெறாமல் காத்​திருப்​ப​தால், சென்​சஸ் பணி​கள் தாமத​மாகி வரு​கின்​றன. இதற்​கிடையே, தாம்​பரம் தாலு​கா​வில் கணக்​கெடுப்பு பணிக்​கான அலு​வலர்​கள் மிக​வும் குறை​வாக இருப்​ப​தால், கிராம உதவி​யாளர்​கள் மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு பணிக்கு நியமிக்​கப்​பட்​டனர்.

இப்​பணி செல்​போன் செயலி மூலம் மேற்​கொள்​ளப்​படும் நிலை​யில், தங்​களுக்கு போதிய பயிற்சி இல்​லாத​தால் இப்​பணி​யில் இருந்து விடுவிக்க வேண்​டும் என்று செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர், தாம்​பரம் கோட்​டாட்​சி​யரிடம் மனு அளித்​துள்​ளனர்.

இதுகுறித்து தமிழகம், புதுச்​சேரிக்​கான மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இயக்​ககம் மற்​றும் குடிமக்​கள் பதிவு இயக்​குநர் எம்​.சுந்​தரேஷ்​பாபு கூறிய​தாவது: மற்ற மாநிலங்​களை ஒப்​பிடும்​போது, தமிழகத்​தில் மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு கடந்த 10 நாட்​களில் நல்ல நிலை​யில் இருக்​கிறது.

முதல் 10 நாட்​கள் தயாரிப்பு பணி​கள் நடை​பெறும். தற்​போது, பெரும்​பாலான மாவட்​டங்​களில் கணக்​கெடுப்பு பணி​ தொடங்​கி​விட்டன. மக்​கள்​தொகை அல்​லது வீடு​கள் அடிப்​படை​யில் கணக்​கெடுப்பு மேற்​கொள்​ளலாம். மக்​கள்​தொகை அடிப்​படை​யில் என்​றால், ஒரு நபர் 800 முதல் 900 மக்​களை​யும், வீடு​கள் அடிப்​படை​யில் என்​றால் ஒரு நபர் 200 முதல் 300 வீடு​களை​யும் கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும்.

ஒருநபர் இத்​தனை வீடு​களில் கணக்​கெடுக்க வேண்​டும் என்று கடுமை​யான உத்​தர​வோ, நிபந்​தனை​களோ எது​வும் இல்​லை. வீடு​கள் அதி​கம் இருந்​தால் பிரித்​துக் கொள்​ளலாம். பொறுப்பு அதி​காரி​களிடம் இதுகுறித்து தெரி​வித்​தால் அவர்​கள் பிரித்து தர உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அதே​போல, ஏதேனும் அச்​சுறுத்​தல் இருந்​தா​லும் பொறுப்பு அதி​காரி​களிடம் தெரிவிக்​கலாம். ஆக.25-ம் தேதிக்​குள் கணக்​கெடுப்பு பணி முடிந்​து​விடும். அதன்​பிறகு, விடு​பட்​ட​வை, திருத்​தப் பணி​கள் நடை​பெறும். அடுத்த 10 நாட்​களில் 70 முதல் 80 சதவீத பணி​களை முடித்து விடு​வோம். கணக்​கெடுப்​பாளர்​கள் கோரும் விவரங்​களை பொது​மக்​கள் தயக்​கமின்றி தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here