Home சினிமா செய்திகள் “நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0

தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி பேட்டிகள் அளித்துள்ளார். அதில் தனது தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்தும் நஷ்டத்தையே ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “நான் தயாரித்த படங்கள் அனைத்துமே எனக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. எனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதலில் ‘சங்குத்தேவன்’ என்ற படத்தை உருவாக்கினேன். ஆனால், அப்படம் கைவிடப்பட்டதால் எனக்கு 1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ மற்றும் ‘லாபம்’ ஆகிய படங்களும் எனக்கு நஷ்டம் தான்.

ஆனால், இப்படங்கள் எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், அவற்றில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஏனெனில் அப்படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது ‘காட்டான்’ வெப் சீரிஸை தயாரித்துள்ளேன். இதற்கான நிதியை ஹாட்ஸ்டார் நிறுவனம் வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version