Home சினிமா செய்திகள் ‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்துக்கு ஆட்டோவில் வந்த ரஜினி!

‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்துக்கு ஆட்டோவில் வந்த ரஜினி!

0

மைசூரில் நடைபெற்று வரும் ‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோவில் வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தில் ரஜினி டாக்டராக நடிக்கிறார். இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ள நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூரில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்த் ஆட்டோவில் வந்து இறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் படப்பிடிப்பு தளத்துக்கு ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கும் ரஜினிகாந்த் வேஷ்டி, சட்டை அணிந்திருக்கிறார். ஆட்டோவில் இருந்து இறங்கி வரும் அவர் அங்கு தன்னைக் காண நின்றிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவிக்கிறார்.

அதேபோல் ரஜினிகாந்த் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வரும் வீடியோவும் வைரலாகி வருகிறது.   

‘தர்மன்’ படத்தில் ரஜினியுடன், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version