Home விளையாட்டு செய்திகள் இலங்கை தொடரில் வர்ணனையாளராகிறார் அஜிங்க்ய ரஹானே

இலங்கை தொடரில் வர்ணனையாளராகிறார் அஜிங்க்ய ரஹானே

0

இந்தியா – இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரரான அஜிங்க்ய ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அஜிங்க்ய ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகிறார். இதற்காக அவர், போட்டியை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வர்ணனைக் குழுவில் இணைந்துள்ளார்.

முதல்தரக் கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் நீண்ட அனுபவம் கொண்ட ரஹானே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இனி தொலைக்காட்சி நேரலையில் வர்ணனையாளராக புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனக்கு இருக்கும் அனுபவத்தை அவர், நேயர்களிடம் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version