Home விளையாட்டு செய்திகள் ‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு

‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு

0

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஒன்றாக ஆர்சிபி அறியப்படுகிறது. இந்நிலையில், அந்த அணியின் உரிமையை கைமாற்றும் திட்டத்தில் அதன் உரிமையாளர் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) நிறுவனம் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில் அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, பி.எக்ஸ்.பி.இ, போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு ரூ.16,706 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஆர்சிபி ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியின் உரிமையை இந்த கூட்டமைப்பு பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆர்சிபி அணியை வாங்க பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அந்த அணியின் உரிமை கைமாற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்: இதேபோல மற்றொரு ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு சுமார் 15,300 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கடந்த 2021 முதல் அந்த அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக அவர் உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version