நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு காலமானார்

0
197

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அப்பா, நாம் மீண்டும் சந்திக்கும் வரை” (untill we meet again) என பதிவிட்டு உடைந்த ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். மேலும், ஜோசஃப் பிரபுவின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. சென்னையில் பிறந்தவர் சமந்தா. இவரது தந்தை ஜோசஃப் பிரபு, தாய் நினேட் பிரபு. அண்மையில் சமந்தா தனது அப்பா குறித்து அளித்த பேட்டியில், “என்னுடைய முழு வாழ்க்கையிலும் நான் மதிப்பீடுதலுடன் போராடியிருக்கிறேன்.

இந்திய பெற்றோர்கள் உங்களை பாதுகாப்பதாக நினைக்கிறார்கள். நீங்கள் புத்திசாலியானவர்கள் இல்லை என அவர்கள் கருதுகிறார்கள். என் தந்தை என்னிடம். ‘உண்மையில் நீ அவ்வளவு புத்திசாலி இல்லை, இதுதான் இந்தியக் கல்வியின் தரம், அதனால்தான் நீயும் முதல் ரேங்க் எடுத்திருக்கிறாய்’ என்று கூறியிருக்கிறார். மதிப்பிடுதலுடன் நான் போராடி பழகியதால், என்னுடைய முதல் படத்துக்கு பாராட்டுகள் வந்தபோதும் கூட அதை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியாமல் இருந்தேன்” என்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here