சமூக வலைதளங்களில் நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை!

0
26

தென்​னிந்​திய நடிகர் சங்​கத்​தின் 70-வது ஆண்​டுப் பொதுக்​குழுக்​கூட்​டம் சென்னை வள்​ளுவர் கோட்​டத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில், சங்​கத்​தின் தலை​வர் நாசர், பொருளாளர் கார்த்​தி, துணைத் தலை​வர்​கள் பூச்சி எஸ்​.​முரு​கன், கருணாஸ் மற்​றும் நிர்​வாகி​களும் பொதுக்​குழு உறுப்​பினர்​களும் கலந்​து​கொண்​டனர். நடிகை லதாவுக்கு வாழ்​நாள் சாதனை​யாளர் விருது வழங்​கப்​பட்​டது. நாடக நடிகர்​கள் 5 பேருக்கு விருதுகள் வழங்​கப்​பட்​டன. பொதுக்​குழு​வில் 15 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

செயற்​குழு கூட்​டங்​களில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​களுக்​கும், 2025–26 ஆண்​டறிக்கை மற்​றும் தணிக்கை செய்​யப்​பட்ட வரவு–செலவு கணக்​கு​களுக்​கும் பேர​வை​யின் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. சங்​கக் கட்​டிடப் பணிக்​காக முதலில் ரூ.40 கோடி வரை கடன் பெற ஒப்​புதல் பெறப்​பட்​டிருந்​தது. அதில் ரூ.25 கோடி கடன் பெறப்​பட்​டு, அசல் மற்​றும் வட்டி நிலு​வை​யின்றி செலுத்​தப்​பட்டு வரு​கிறது. மேலும் ரூ.10 கோடி வரை கூடு​தல் கடன் பெற ஒப்​புதல் கிடைத்​துள்​ளது.

தற்​போதைய நிர்​வாகத்​தின் பதவிக்​காலம் 2025 முதல் 2028 வரை 3 ஆண்​டு​களுக்கு நீடிக்க அரசின் அங்​கீ​காரம் கிடைத்​திருக்​கிறது. தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துடன் ஏற்​கெனவே இருந்த ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில் நிலு​வை​யில் உள்ள விஷ​யங்​களைத் தீர்க்க, உயர்​மட்​டக் குழு அமைத்​து, புதிய உடன்​படிக்​கையை விரை​வில் செயல்​படுத்த வேண்​டும்.

திரைப்​படங்​களில் துணை நடிகர்​களில் 50 சதவீத வாய்ப்​பு, நடிகர் சங்க உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்பட வேண்​டும். சம்​பளம் அல்​லது பிற பிரச்​சினை​கள் தொடர்​பாகப் புகார் அளிக்​கும் முக்​கிய நடிகர்​கள், சம்​பந்​தப்​பட்ட திரைப்​படத்​துக்​கான உரிய ஒப்​பந்​தத்​தை​யும் இணைத்​தால்​தான் அந்​தப் புகார் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்.

பிரபல நடிகர், நடிகைகள் குறித்து சமூக வலை​தளங்​களில் அவதூறான, ஆபாச​மான அல்​லது சர்ச்​சைக்​குரிய கருத்​துகளைப் பரப்​புபவர்​கள் மீது காவல்​துறை​யில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்​கச் சங்க நிர்​வாகத்​துக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது என்​பது உள்பட பல்​வேறு தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய சங்​கத்​தின் தலை​வர் நாசர், “நடிகர் சங்க கட்​டிடம் இந்த வருடத்​துக்​குள் திறக்​கப்பட வேண்​டும் என்று அதற்​கான வேலைகளில் ஈடு​பட்டு வருகிறோம். வெகு விரை​வில் அதற்​கான தேதியை அறி​விப்​போம். சமீபத்​தில் முதல்​வரை சந்​தித்​த​போது திறப்பு விழாவுக்கு வரு​மாறு கேட்​டிருக்​கிறோம். தேதி முடி​வானதும் முறைப்​படி அனு​மதி கேட்​போம்” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here