நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை ஜங்ஷனில் இருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் இன்று லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
