மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் ஆவணி அஸ்வதி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா்.
முதல் பொங்கலுக்கு மண்டைக்காடு பேரூராட்சித் தலைவா் ராணி ஜெயந்தி தீ மூட்டினாா். பின்னா் பொங்கலுக்கு தீா்த்தம் தெளித்தல், அன்னதானம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை மாலை 1,008 திருவிளக்கு பூஜை, தங்க ரத பவனி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு கோயில் சமய வகுப்பு மாணவா்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இரவு அத்தாழ பூஜையுடன் அஸ்வதி விழா நிறைவு பெற்றது.















