கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஆயுதப்படை முகாம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 72). சம்பவத்தன்று இவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் உள்ளே 3 பேஸ் மின் இணைப்பு கொண்ட பம்பு செட்டி உள்ளது. இந்த பம்பு செட்டில் உள்ள இணைப்பு மின் வயரை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட செல்வம் திருடன், திருடன் என சத்தம் போட்டார்.
உடனே அந்த வாலிபர் சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு, வெட்டிவைத்திருந்த மின் வயரை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின்பேரில் நேசமணிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து, சந்தேகநபரின்பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தற்போது கோட்டார் பெரியவிளையில் வசிப்பவருமான 25 வயது வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.














