கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்து பணிமனையில் நேற்று மரநாய் ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மர நாயை பத்திரமாக மீட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.














