Home சினிமா செய்திகள் ‘டாக்ஸிக்’ உணரப்பட வேண்டிய கதை: கீது மோகன்தாஸ்

‘டாக்ஸிக்’ உணரப்பட வேண்டிய கதை: கீது மோகன்தாஸ்

0

யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி உட்பட பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்’. இதை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

யாஷின் 39-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் பற்றி கீது மோகன்தாஸ் கூறும்போது, “இது வித்தியாசமான கதையை கொண்ட படம். யாஷ், தனித்துவமான மனிதர். அவரது புத்திசாலித்தனத்தை கவனித்துள்ளேன். சினிமா மீதான அவர் ஆர்வம் உத்வேகம் அளிக்கும்.

டாக்ஸிக் மாறுபட்ட அனுபவத்தைக் கொண்டு வரும். இது பார்ப்பதற்கு மட்டுமல்ல, உணரப்பட வேண்டிய திரைப்படம்” என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version