Home மாநில செய்திகள் சொன்னதை செய்யாத ‘புஸ்வாண பட்ஜெட்’ – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சொன்னதை செய்யாத ‘புஸ்வாண பட்ஜெட்’ – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

0

தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது: சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட தவெக அரசின் பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ ஆக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ‘வேஸ்ட் வேஸ்ட்’ என சொல்லும்படியாகத்தான் அமைந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களின் ‘ரீமேக் வெர்சன் பட்ஜெட்’ ஆகவும் அது அமைந்துள்ளது. மக்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டண குளறுபடி, விலைவாசி உயர்வு பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்துக்குதேவையான புதிய தொலைநோக்கு திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட் ஆக உள்ளது.

தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் மூச்சேவிடப்படவில்லை. மொத்தத்தில் சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் தவெக அரசின் முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version