Home கன்னியாகுமரி செய்திகள் மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் உயிரிழப்பு

0

கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஹாரின் தாஸ் (26). ஏ.சி. மெக்கானிக்காக இவர் வேலை பார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அந்த பகுதியில் நின்ற ஒரு அயினி மரத்தை விலைக்கு  வாங்கி உள்ளார்.  

அந்த மரத்தை வெட்டுவதற்காக நேற்று (செப்.,2) காலை பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் நின்ற தென்னை மரத்தை பாதுகாக்க  கட்டி இருந்த இரும்பு கம்பி ஆயினி மரத்தை முறிக்க இடையூறாக இருந்துள்ளது.

அந்த இரும்பு கம்பியை ஹாரிதாஸ் கழட்டி கையில் பிடித்துக் கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது மேல் பகுதி வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் ஹாரின் தாஸ் கையில் இருந்த இரும்பு கம்பி உரசி உள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹாரின் தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version