பத்மநாபபுரம் நகராட்சி உரக்கிடங்கு மருந்து கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு மட்டும் குப்பை, மட்கா குப்பை என பிரிக்கப்படுவதுடன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகரில் உள்ள கழிவு நீரை கொண்டு வந்து சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஐ யு டிஎம் மற்றும் 15ஆவது நிதி குழு சார்பில் ரூபாய் ஒரு கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினை பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை வகித்தார். பொறியாளர் ரமேஷ் முன்னிலையில் சேர்மன் அருள் ஷோபன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் நாகராஜன், கண்ணன், சேக் முஹம்மது, மும்தாஜ் மற்றும் நகர திமுக அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.