இரணியல்: ஆட்டோ டிரைவரை குத்தி பணம் பறிப்பு – 3 ஆண்டு சிறை

0
375

மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (40). இவர் மார்த்தாண்டத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாசம் 18ஆம் தேதி இரவு அங்கு வந்த குளச்சல் பகுதி சேர்ந்த கவாஸ்கர்(24) என்பவர் குளச்சல் செல்ல வேண்டும் என சவாரிக்கு அழைத்துள்ளார்.

அவரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, குறும்பனை பகுதியில் வைத்து கவாஸ்கர் ஆட்டோவை நிறுத்தி மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சந்திரனிடம் பணம் மற்றும் செல்போன்களை தருமாறு மிரட்டி, கத்தியால் குத்தி விட்டு அவரது சட்டை பையில் வைத்திருந்த 19 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து சந்திரன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கவாஸ்கரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.   இது தொடர்பான வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அமரதீன் நேற்று ( 9-ம் தேதி)  தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளியான கவாஸ்கருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்த தீர்ப்பு வழங்கினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here