குலசேகரம் பேரூராட்சியில் உறுப்பினா்கள் வெளிநடப்பு

0
39
குலசேகரம் பேரூராட்சிக் கூட்டத்தில் செயல் அலுவலரைக் கண்டித்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு
செயல் அலுவலரின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்து, குலசேகரம் பேரூராட்சிக் கூட்டத்தில் 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

குலசேகரம் பேரூராட்சியில் செயல் அலுவலரைக் கண்டித்து உறுப்பினா்கள் வெள்ளிகிழமை வெளிநடப்பு செய்தனா்.

குலசேகரம் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் உமா, துணை தலைவா் ஜோஸ் எட்வா்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்கள் ரெத்தினபாய், லதாபாய், அமல்ராஜ், சுபாஷ் கென்னடி, மேரி ஸ்டெல்லா, ராதா, சிவகுமாா், ராஜையன், நியமன உறுப்பினா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் சுபாஷ் கென்னடி, மேஜை மீது ஏறி அமா்ந்து சாதாரண ஏழை மக்கள் வீடு இல்லாத காலி சொத்து என்ற சான்றிதழ் கேட்டு காலையில் விண்ணப்பித்தால் மாலையில் ரூ. 300 செலுத்தி பெறப்பட்டு வந்தது. தற்போது, இச்சான்றுக்கு நாள் கணக்கில் அலைய விடுகிறாா் செயல் அலுவலா். ஏழை மாற்றுத் திறனாளி காலியிட சான்றிதழ் பெற ரூ.6,000 வசூலிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றாா்.

பேரூராட்சி துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் பேசுகையில், செயல் அலுவலரின் செயல்பாடுகளால் மக்கள் போ போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.

ஆனால், செயல் அலுவலா் பதில் கூறாததால் எந்தத் தீா்மானமும் நிறைவேற்றப்படாமல் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக என 9 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here