சிந்து மாகாணத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பாக். ராணுவ தளபதியின் திட்டத்துக்கு எதிர்ப்பு

0
14

பாகிஸ்தானின் சிந்து உள்​ளிட்ட மாகாணங்​களைப் பிரித்து புதிய மாகாணங்​களை உரு​வாக்க வேண்டும் என்ற அந்​நாட்டு ராணுவத் தளபதி அசீம் முனீர் திட்டத்துக்கு எதிராக பல்​லாயிரக்​கணக்​கானோர் பேரணி நடத்தினர்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்​றும் அவரது நெருங்​கிய சகா​வும், அந்​நாட்டு உள்​துறை அமைச்​சரு​மான மொஹ்​சின் நக்வி ஆகியோர் சிந்து உள்​ளிட்ட மாகாணங்​களைப் பிரித்து புதிய மாகாணங்​களை உரு​வாக்​கும் திட்​டத்தை முன்வைத்​துள்​ளனர். இந்​தத் திட்​டத்​துக்கு எதிராக பாகிஸ்தானின் முக்​கிய வர்த்​தக நக​ரான கராச்​சி​யில் பல்​லாயிரக்​கணக்​கான சிந்து தேசி​ய​வாதி​கள் வீதி​களில் இறங்கி பிரம்​மாண்​டப் பேரணி நடத்தினர்.

பாரம்​பரிய சிந்தி தொப்பி மற்​றும் ‘அஜ்​ரக்’ சால்வை அணிந்து, வண்​ணமய​மான பேருந்​துகள் மூலம் சென்று கராச்​சி​யில் திரண்ட போராட்​டக்​காரர்​கள், சிந்து மாகாணத்​தைப் பிரிக்​கும் முயற்சியைக் கைவிடக் கோரி முழக்​கமிட்​டனர். மேலும், சிந்து தேசி​ய​வாத அமைப்​பான ‘ஜியே சிந்து முத்​தாஹிதா மகாஸ்’, தனியான சிந்​து​தேஷ் கோரிக்​கையை முன்​வைத்​ததுடன், பாகிஸ்தானின் அதி​காரமிக்க பஞ்​சாப் மாகாணத்​துக்கு எதிராகப் பொருளாதா​ரத் தடை விதிக்​கப்​போவ​தாகவும் எச்​சரித்​துள்​ளது.

ஆளும் கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் சிந்து மாகாணத்​தின் முக்கியக் கட்​சி​யான பாகிஸ்​தான் மக்​கள் கட்​சி​யின் தலை​வர் பிலா வல் பூட்டோ-சர்​தாரி, சிந்​து​வைப் பிரிக்​கும் எந்​தவொரு முயற்​சிக்​கும் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக கடும் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

“இந்த நட​வடிக்கை சிந்து மக்​கள் ஆயுதம் ஏந்​து​வதற்​கும், கராச்சி மற்​றும் ஹைத​ரா​பாத் வீதி​களில் ரத்த ஆறு ஓடுவதற்​கும் வழிவகுக்​கும்” என்று அவர் எச்​சரித்​துள்​ளார்.

15 மாகாணங்​களாக பிரிப்பு

பாகிஸ்தானில் தற்​போது 4 மாகாணங்​கள் உள்ள நிலை​யில், அவற்றை 12 முதல் 15 மாகாணங்​களாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்​ளது. இது தொடர்​பாக பொது​வாக்​கெடுப்பு நடத்து​வது குறித்து 2026-ம் ஆண்டு இறுதிக்​குள் முடிவெடுக்கப்படும் எனப் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை தெரிவித்திருந்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here