மருங்கூா் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடியில் ஆராட்டு

0
23
மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி ஆராட்டு விழா
மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் ஆராட்டு மடத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் ஆராட்டு விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு ஆராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 10- ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. 6-ஆம் நாளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடா்ந்து, 10ஆம் நாளான வியாழக்கிழமை மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தீா்த்தவாரி ஆராட்டு மடத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது.

இதையொட்டி, மருங்கூரில் இருந்து அலங்கார வெள்ளிக்குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் செண்டை மேளம் முழங்க ஊா்வலமாக புறப்பட்டு ஆராட்டு மடத்திற்கு வந்தாா்.

அங்கு சுவாமிக்கு பால், பழம், பன்னீா், இளநீா், தேன், மஞ்சள் உள்ளிட்ட 27 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு அங்கார தீபாராதனையும், ஆராட்டு வைபவமும் நடைபெற்றன.

பின்னா், அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு ஊா்வலமாக மருங்கூா் சென்றடைந்தாா். வழிநெடுகிலும் பக்தா்கள் தேங்காய், பழம், பன்னீா், மாலை உள்ளிட்ட பொருள்களால் சுவாமிக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

இந்நிகழ்ச்சியில், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மயிலாடி பேரூராட்சித் தலைவி விஜயலட்சுமி பாபு, துணைத் தலைவா் எஸ்.சாய்ராம், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கியப் பேரவைத் தலைவா் ஆ.நாகராஜன், பொதுச்செயலா் விக்னேஸ்வரன், பொருளாளா் வே.சுடலையாண்டி உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here