கொல்லங்கோடு அருகே கேரள போக்குவரத்துக் கழக மெக்கானிக் தற்கொலை

0
34
கொல்லங்கோடு அருகே அணுக்கோட்டில் கேரள அரசுப் போக்குவரத்துக் கழக மெக்கானிக் உயிரிழந்த சம்பவம்
கொல்லங்கோடு அருகே அரசுப் போக்குவரத்துக் கழக மெக்கானிக் உயிரிழப்பு

கொல்லங்கோடு அருகே கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (46). கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக மெக்கானிக். இவரது மனைவி சபிதா மோள். இவா்களுக்கு 17 வயதில் மகன், 12 வயதில் மகள் உள்ளனா்.

ரமேஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், 3 மாதங்களுக்கு முன்பு மனைவி அவரைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றாராம்.

இந்நிலையில், அவரைச் சந்திக்க ரமேஷ்குமாரின் சகோதரா் புதன்கிழமை வீட்டிற்குச் சென்றாராம். அப்போது, வீட்டின் மாடியில் ரமேஷ்குமாா் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டாராம்.

இதுகுறித்து சபிதாமோள் அளித்த புகாரின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். மேலும், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here