காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மர்ம மரணம்: 2-வது நாளாக மதுரையில் உறவினர்கள் போராட்டம்

0
27

மதுரை அருகே காவல் நிலை​யத்​தில் லாரி ஓட்​டுநர் மர்​மமாக உயி​ரிழந்த விவகாரத்​தில், தங்​களுக்கு நிதி வேண்​டாம்; நீதிதான் வேண்​டும் என அவரது உறவினர்​கள் 2-வது நாளாக போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

தேனி மாவட்​டம், தேவாரம் அருகே உள்ள டி. அழகர்​நாயக்​கன்​பட்​டியைச் சேர்ந்த ரங்​கப்​பன் மகன் பால​கிருஷ்​ணன்(42). இவர் மதுரையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாக​ராஜிடம் ஓட்​டுநராகப் பணி​யாற்​றினார்.

இவர் தேவாரத்​தில் இருந்து மதுரைக்கு ஏலக்​காய் மற்​றும் பண்​டல்​களை ஏற்​றிச் சென்​றபோது, வாலாந்​தூர் கண்​மாய்க் கரை அருகே நவ.4-ம் தேதி திடீரென தீப்​பற்றி எரிந்​தது. இது​தொடர்​பாக முதலில் வாலாந்​தூர் காவல் நிலை​யத்​தில் விபத்து வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

தீ விபத்து தொடர்​பாக விசா​ரணைக்​காக, செக்​கானூரணி காவல் நிலை​யத்​துக்கு நவ.13-ம் தேதி அழைக்​கப்​பட்ட பால​கிருஷ்​ணன், அடுத்த நாள் (நவ.14) அதி​காலை​யில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​ட​தாக காவல்​துறை​யினர் தெரி​வித்​தனர்.

இதையடுத்து, அவரது உடலை போலீ​ஸார் கைப்​பற்றி மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு உடற்​கூறு ஆய்​வுக்​காக அனுப்​பினர். இந்​தச் சம்​பவம் காவல் நிலை​யத்​திலேயே நிகழ்ந்​துள்​ள​தால், பேரையூர் நீதித்​துறை நடுவர் ஆனந்​த​ராஜா செக்​கானூரணி காவல் நிலை​யத்​துக்​குச் சென்று சம்​பவம் நடந்த கழிப்​பறை மற்​றும் விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்ட இடங்​களை நேற்று முன்​தினம் ஆய்வு செய்​தார்.

மேலும், அங்கு பணி​யில் இருந்த காவல் அதி​காரி​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தினார். நேற்று 2 வது நாளாக ஆய்​வாளர் முத்து உள்​ளிட்ட பணி​யில் இருந்த போலீ​ஸாரிடம் விசா​ரித்​தார். இதைத் தொடர்ந்து, பால​கிருஷ்ணனின் உடல், 3 மாவட்​டங்​களைச் சேர்ந்த மருத்​து​வர் குழு​வின​ரால் உடற்​கூறு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், பால​கிருஷ்ணனை காவலர்​கள் தாக்​கிக் கொன்று விட்டு தற்​கொலை செய்து கொண்​டார் என நாடக​மாடுவ​தாக அவரது உறவினர்​கள் குற்​றம்​சாட்​டினர். மேலும், அவரது உடலைப் பெற்​றுக்​கொள்ள மறுத்து, அரசு மருத்​து​வ​மனை முன் நேற்று சாலைமறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இத​னால் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது.

உயி​ரிழந்த லாரி ஓட்​டுநரின் மனைவி சுதா கூறிய​தாவது: எனது கணவருக்கு காவல்​துறை​யினர் கடும் அழுத்​தம் கொடுத்​தனர். தீப்​பி​டித்து எரிந்த ஏலக்​காய் மூட்​டைகளுக்கு எனது கணவர்​தான் பொறுப்​பேற்க வேண்​டும் என்று காவல்​துறை​யினர் வற்​புறுத்​தி​னர். சம்​பவத்​துக்கு 2 நாட்​களுக்கு முன்பே அவரை அழைத்து விசா​ரித்​தனர். அவர் ஏற்றி வந்த லாரி​யில் ஏலக்​காய், கடலை மூட்​டைகள் இருந்​த​தாக எனது கணவர் கூறினார்.

எனது கணவர் முன்பு மகாராஷ்டிராவில் லாரி ஓட்டி வந்​தார். பிள்​ளைகளைப் பார்க்க வேண்​டும் என்​ப​தற்​காக, தற்​போது மதுரை – தேவாரத்​துக்கு லாரி ஓட்டி வந்​தார். அதற்​குள் இப்​படி​யாகி விட்​டது. லாரி​யில் இருந்த ஏலக்​காய் மூட்​டைகளை யார் எடுத்​தார்​கள் என்​பது தெரிய​வில்லை. ஆனால், அனைத்​துக்​கும் எனது கணவர்​தான் பொறுப்பு எனக்​கூறி அவரை கொடுமைப்​படுத்​தி​யுள்​ளனர். அவர் தற்​கொலை செய்​யும் அளவுக்கு கோழை அல்ல. எனவே, எங்​களுக்கு அரசு கொடுக்​கும் நிதி வேண்​டாம், நீதிதான் வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: இதற்கிடையே லாரி ஓட்​டுநர் மர்​மமாக உயி​ரிழந்​தது தொடர்​பான வழக்கு சிபி​சிஐடிக்கு மாற்​றப்​பட்​ட​தால் முதல்​கட்ட விசா​ரணை நேற்று தொடங்​கியது. தென்​மண்​டல சிபி​சிஐடி எஸ்பி ஸ்டா​லின் நேற்று மதுரை வந்​தார்.

அவர் பால​கிருஷ்​ணன் மரணம் தொடர்​பான முதல்​கட்ட விவரங்​களைச் சேகரித்து விசா​ரணை​யைத் தொடங்​கினார். சிபி​சிஐடி எஸ்பி ஸ்டா​லின், ஆய்​வாளர் சுரேஷ் உள்​ளிட்​டோர் செக்​கானூரணி காவல் நிலை​யம் மற்​றும் வாலாந்​தூர் அருகே ஏலக்​காய் லோடு லாரி தீவிபத்து ஏற்​பட்ட இடத்​துக்கு நேற்​றிரவு சென்று ஆய்வு செய்​தனர்.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு: செக்​கானூரணி காவல் நிலை​யத்​தில் லாரி ஓட்​டுநர் பால​கிருஷ்​ணன் அமர்ந்​திருப்​பது, அவர் காவல் நிலைய கழிப்​பறைக்​குச் செல்​வது, போலீ​ஸார் கழிவறையை நோக்கி ஓடுவது போன்ற காட்​சிகள் அடங்​கிய சிசி​டிடி கேமரா பதிவு நேற்று சமூக வலை தளங்​களில் வெளியானது. அந்​தக் கட்​சிகள் தொடர்ச்​சி​யாக இல்​லாமல் தனித்​தனியே இருந்​தது.

ஆனால், லாரி ஓட்​டுநர் பால​கிருஷ்ணனை தாக்​கும் வீடியோ பதிவு​களைத் தவிர்த்​து​விட்டு அவர்​களுக்​குச் சாதக​மான காட்​சிகளை மட்​டும் போலீ​ஸார் வெளி​யிட்​டுள்​ளனர் என பால​கிருஷ்​ணன் குடும்​பத்​தினர் குற்​றம்​சாட்​டினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here