மதுரை நகைக் கடை கொள்ளையில் இன்ஸ்டா பிரபலத்தை தீவிரமாக தேடும் போலீஸார்

0
23

 மதுரை நகைக் ​கடை கொள்ளை வழக்​கில் தலைமறைவாக இருந்து வரும் இளைஞரை தனிப்​படை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். எஞ்​சிய நகைகளை மீட்க வயல்​வெளி​களில் போலீ​ஸார் 2-வது நாளாக தேடுதல் வேட்டை நடத்​தினர்.

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் தனிஷ்க் நகைக்​கடை கொள்ளை சம்​பவத்​தில், மதுரை விகேபி நகர் அருட்​பெருஞ் ஜோதி தெரு​வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் சுரேஷ் மக​னும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான நிஷாந்த் (23) ஈடு​பட்​டது தெரிய வந்​தது. கொள்​ளைக்கு உடந்​தையாக இருந்த நிஷாந்​தின் தந்தை சுரேஷ் மற்​றும் அவரது இன்ஸ்டாகிராம் தோழி​யான மதுரை திருப்​பாலை​யைச் சேர்ந்த மீனாட்​சியை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் கொள்​ளை​யடித்த நகைகளை நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி ஆகியோரிடம் கொடுத்​தது தெரிய வந்​தது. இதையடுத்து மலை​யடிவார புதருக்​குள் பதுக்கி வைத்​திருந்த 15 கிலோ நகைகளை மீனாட்​சியை அழைத்​துச் சென்று போலீ​ஸார் மீட்​டனர். பின்​னர், இரு​வரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

முக்​கிய குற்​றவாளியான நிஷாந்த் தொடர்ந்து தலைமறைவாக உள்​ளார். இன்ஸ்டாவில் பிரபலமான நிஷாந்​தின் நண்​பர்​கள், தோழிகளின் செல்​போன்​களை​யும் போலீ​ஸார் கண்​காணித்து வரு​கின்​றனர். நிஷாந்தை தேடி திருப்​பூர், சேலம் பகுதி​களுக்கு தனிப்​படை​யினர் விரைந்​துள்​ளனர். ஓரிரு நாட்​களில் அவரைப் பிடித்து விடுவோம் என போலீ​ஸார் நம்​பிக்கை தெரி​வித்​தனர். கொள்​ளைபோன எஞ்​சிய நகைகளை மீட்க 2-வது நாளாக நேற்று மாடக்​குளம் கண்​மாய், அதைச் சுற்​றியுள்ள வயல்​வெளி​களில் போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். இதில் எது​வும் சிக்​க​வில்லை.

தோழிக்​காக கொள்ளை: போலீ​ஸார் கூறிய​தாவது: தோழி மீனாட்​சி​யின் தேவையைப் பூர்த்தி செய்​யும் வகை​யில் மெகா கொள்​ளையை நிஷாந்த் நிகழ்த்தி உள்​ளார். அவரின் செல்​போன் உரை​யாடல்​களை ஆய்வு செய்​த​போது கொள்​ளைக்கு முன்​பும், பின்​பும் அவர் மீனாட்​சி​யுடன்​தான் அதிக நேரம் பேசி​யுள்​ளார். மீனாட்​சி​யின் இரு சக்​கர வாக​னத்தை நிஷாந்த் பயன்​படுத்தி வந்​துள்​ளார். இந்​தக் கொள்​ளை​யின் பின்​னணி​யில், வேறு சிலரும் இருக்​கலாம் என சந்​தேகிக்​கிறோம்.

நிஷாந்தை பிடித்​தால் மட்​டுமே கொள்​ளைச் சம்​பவத்​தின் முழு பின்​னணி​யும் தெரிய வரும். நிஷாந்த் செல்​போன் எண்ணை அடிக்​கடி மாற்​று​வ​தால் இருப்​பிடத்​தைக் கண்​டறிவதில் சிக்​கல் உள்​ளது. இருப்​பினும் விரைவில் கைது செய்​து​விடுவோம். கைது செய்​யப்​பட்ட நிஷாந்த் தந்தை சுரேஷ், அவனது தோழி மீனாட்​சியை காவலில் எடுத்து விசா​ரிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம். இதற்​காக விரைவில் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​யப்​படும். இவ்​வாறு கூறினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here