
மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று பகுதியில் வழிப்பாதை பிரச்சினையால் முன்விரோதம் கொண்டிருந்த துரை (45), ராஜேந்திரன் (63) தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் துரை, ராஜேந்திரன் இருவரும் காயமடைந்து குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருதரப்பு புகார்களின் பேரில் துரை, ராஜன், ராஜேந்திரன், சாந்தா ஆகிய 4 பேர் மீது மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.













