ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம்

0
25

ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் காரணமாக மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்த தகவலை அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தியாக வெளியிட்டுள்ளது அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று. கெஷ்ம் தீவு, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தச் சூழலில் இந்த தாக்குதல் ஈரான் மீது நடந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளனர்.

முன்னதாக, இடைக்கால தேர்தலின் போது ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டது அமெரிக்கா. இந்த தாக்குதல் குறித்து ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தரையிலிருந்து வான் பரப்பை தாக்கும் திறன் கொண்ட ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்கா இதில் தாக்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று கூட்டு தாக்குதல் மேற்கொண்டது அமெரிக்காவும், இஸ்ரேலும். இதன் காரணமாக மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது.

மேற்காசிய போர் காரணமாக அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் தீர்வு கிடைத்தால் அது உலக நாடுகளுக்கு நலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here