ஹாங்காங் சிக்ஸில் இந்திய அணி தோல்வி

0
33

ஹாங்காங் சர்​வ​தேச சிக்ஸ் கிரிக்கெட் தொடர் அந்நாட்டில் உள்ள கவ்​லூன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானுடன் மோதி​யது.

முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 ஓவர்​களில் 88 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷசாங்க் சிங் 11 பந்​துகளில், 5 சிக்ஸர்​கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்​கள் விளாசினார். ராகுல் திரிபாதி 9, நிதிஷ் ராணா 19, நடராஜன் 12 ரன்​கள் சேர்த்​தனர்.

89 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 3.5 ஓவர்களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 91 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கவாஜா நஃபை 12 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 2 பவுண்டரிகளு​டன் 41 ரன்​களும், கேப்​டன் அப்​பாஸ் அஃப்ரிடி 8 பந்துகளில், 5 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியுடன் 35 ரன்​களும் விளாசினர். இந்த ஜோடி 13 பந்​துகளில் 59 ரன்​களை குவித்​தது. அப்​பாஸ் அப்​ரிடி, கிருணல் பாண்​டியா வீசிய முதல் ஓவரில் 5 சிக்ஸர்​களை பறக்​க​விட்​டார். இந்​திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் மோதுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here