பினான்ஸ் கணக்குகளில் இருந்து ரூ.60,000 கோடி திருட்டு – வரலாற்றின் மிகப் பெரிய கிரிப்டோ கொள்ளை

0
27

பிரபல கிரிப்டோ கரன்ஸி நிறு​வனமான பினான்ஸ் கணக்​கு​களி​லிருந்து 6.3 பில்​லியன் டாலர் அதாவது இந்​திய மதிப்பில் சுமார் ரூ.60,000 கோடி மதிப்​பிலான கிரிப்டோ சொத்துகள் ஹேக் செய்​யப்​பட்டு திருடப்​பட்டு உள்​ளன. இது கிரிப்டோ வரலாற்​றிலேயே நடந்த மிகப்​பெரிய சைபர் தாக்குதலாகும்.

தொடக்​கத்​தில், பினான்ஸ் நிறு​வனத்​தின் மென்​பொருள் பொறியாளர் ஒரு​வரின் மடிக்​கணினி ஹேக் செய்​யப்​பட்​டதன் மூலம் இத்தாக்​குதல் தொடங்​கியுள்ளது. இருப்​பினும், இது ஒரு சாதா​ரண தாக்​குதல் அல்ல என்​றும், பல கட்​டங்​களாகத் திட்​ட​மிடப்​பட்டு நடத்​தப்​பட்ட மிகவும் சிக்​கலான தாக்​குதல் என்​றும் பினான்ஸ் நிர்வாகம் விளக்​கம் அளித்​துள்​ளது.

இந்த மிகப்​பெரிய கொள்​ளை​யின் பின்​னணி​யில் வட கொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவு பெற்ற ஹேக்​கிங் குழுக்​கள் இருக்​கலாம் என சந்​தேகப்​படு​கிறது. சர்​வ​தேச சைபர் பாது​காப்பு அமைப்​பு​கள் மற்​றும் பிளாக்​செயின் நிறு​வனங்​களு​டன் இணைந்து, திருடப்​பட்ட தொகை​யில் இது​வரை சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்​பிலான கிரிப்டோ சொத்​துக்​கள் முடக்கப்பட்​டுள்​ளன.

வாடிக்​கை​யாளர்​களின் வைப்​புத்​தொகை பாது​காப்​பாக இருப்​ப​தாகவும், இந்த விபத்​தால் ஏற்​பட்ட அனைத்து இழப்​பு​களை​யும் பினான்ஸ் நிறு​வனமே முழு​மையாக ஏற்​கும் என்​றும் அதன் இணை நிறு​வனர் யி ஹே உறுதி அளித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here