“வித்தியாசமான நான்” – கயாடு லோஹர் பகிர்ந்த ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு அனுபவம்

0
29

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

‘பைசன்’ படத்தினைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் படம் ‘மஞ்சணத்தி’. இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் பூர்ணிமா ரவி, விது, காக்கா முட்டை விக்னேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. தற்போது இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படத்தின் நாயகிகளில் ஒருவரான கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு வித்தியாசமான உலகம்; ஒரு வித்தியாசமான பள்ளி; ஒரு வித்தியாசமான நான்.

விஷயங்களை சற்று வித்தியாசமாக பார்க்க வைத்த ஒரு கதை சொல்லி. ‘மஞ்சணத்தி’ ஷெட்யூல் நிறைவடைந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.

நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பில் திவ்யா மாரி செல்​வ​ராஜ் வழங்​கும் ‘மஞ்சணத்தி’ படத்தை ஃபார்​சூன் என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனத்​தின் சுஷாந்த் பிர​சாத் இணைந்து தயாரிக்​கிறார். படத்தின் ஒளிப்பதிவை எழில் அரசு கேவும், படத்தொகுப்பை செல்வா ஆர்கேவும், கலை இயக்கத்தை ராமு தங்கராஜும் மேற்கொள்கின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here